ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நேற்று ஒய்.பி.சவான் நினைவு விரிவுரை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுப் பேசினார்.
real estate 1
கடந்த ஜனவரியில் இருந்து மொத்தமாக வட்டிவிகிதத்தை 1.5 சதம் குறைத்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 0.25% வட்டிகுறைப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம தற்பொழுதைய வட்டி விகிதம் 6.5% ஆக உள்ளது.
இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக்குறைந்த வட்டிவிகிதமாகும்.
ரியல் எஸ்டேட் விலைக்குறைப்பில் பாதிக்கும் மேல் ரிசர்வ் வங்கியால் அதன் வாடிக்கையாளர்களுக்கு அண்ட உறுப்பு வங்கிகளின் மூலம் வழங்கப் பட்டு வருகின்றது.
Raghuram_Rajan--621x414
என்னைப் பொருத்தவரையில், எல்லாப் பக்கத்தில் இருந்தும் பங்களிப்பு இருக்க வேண்டும். இரு கை தட்டினால் தான் ஓசைவரும், எனவே ரியல் எஸ்டேட் முதலாலிகளும் தங்கள் பங்குக்கு உரிய விலை மாற்றத்தைச் செய்து மக்கள் மனைகளை வாங்க ஊக்குவிக்கப் பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மக்கள் ஒரு வீட்டின் இட மதிப்பு, கட்டிட மதிப்பு போன்ற அம்சங்களைப் பார்த்தே வீடு வாங்குவது குறித்து முடிவெடுக்கின்றனர். எனவே, நாம் விலையில் மாற்றம் செய்து மக்கள் வீடு வாங்கும் முடிவெடுக்க வைக்க வேண்டும் . இதன் மூலம் தேங்கிக் கிடக்கும் வீடுகள் விர்பனை சூடுப்பிடிக்கும்.
real estate 2
வங்கிகள் வட்டி குறைத்தது மட்டும் பத்தாது. மக்களின் வாங்கும் சக்திக்கு உட்பட்ட கடன் வசதிகள் ஏற்படுத்தித் தருதலும் அவசியம் ” என்றார்.
ரியல் எஸ்டேட் தொழிலிலும் வெளிப்படைத்தன்மை வர வேண்டியது அவசியம். நிலம் கையப்படுத்துதல், கட்டிடம் கட்டுதல், விற்பனை ஆகியவை வெளிப்படையாக இருக்கச் செய்தல் நோக்கி நாம் பயணப்பட வேண்டும்.
இது போன்ற வெளிப்படைத் தன்மை,எந்தத் திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்யப் பட்டுள்ளது, எந்தத் திட்டத்திற்கு யார் யார் முதலீடு செய்துள்ளார்கள் போன்ற விவரம் நிதிமேலாண்மை செய்பவர்களுக்கு தெரியவரும்.
எல்லா வகையான் கட்டிடங்கள், அது தனிநபர் வீடானாலும் சரி, பொது சாலை ஆனாலும் சரி, அது நாட்டின் வளர்ச்சிக்கு உந்துதலாய் இருக்கும். குறிப்பாக வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த வளர்ச்சி அவசியம் ” என ரகுராம் ராஜன் கூறினார்.
raghuram rajan 2