டில்லி:

ஈபிஎப் உள்பட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றதில் இருந்து மக்கள் விரோத போக்கையே கடைபிடித்து வருகிறது. டிஜிட்டல் இந்தியா என்ற பேரில், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வங்கி சேவைகளுக்கு கடும் கட்டுப்பாடு, அனைத்து வகையான சேவைகளுக்கும் பணம் என மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்கிக்கொண்டே வருகிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, காஸ் மானியம் ரத்து மற்றும் மாதாமாதம் விலை உயர்வு போன்ற மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு ஏழை மக்களின் சேமிப்பான, சிறுசேமிப்புக்கான வட்டி விகிதத்திலும் கை வைத்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை காலாண்டுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி கடந்த அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தது.

ஆனால், தற்போது சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களை குறைத்து அறிவித்து உள்ளது. அதன்படி,  தேசிய சேமிப்பு சான்றிதழ், வருங்கால வைப்பு நிதி போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுகான வரி விகிதம் 20 புள்ளிகள் வரை குறைத்துள்ளது.

ஆனால்,  மூத்த குடிமகனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் 8.3% தொடரும் என்று அறிவித்துள்ளது.

இந்த மாற்றங்கள் வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று பெருளாதார விவகாரங்களுக்கான செலாளர் சுபாஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்கள்.