ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களிலும் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு…

சென்னை:
ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களிலும் கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்படுவதாக வணிகர்கள் அறிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் காரணமாக  சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு வரும் 19ந்தேதி முதல் 30ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக அனைத்து தொழில்களும் மீண்டும் முடங்கும் நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில்,  ராணிப்பேட்டை மாவட்டத்திலும் வரும் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்   மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் அறிவித்து உள்ளார்.
அதுபோல,  கடலூர் மாவட்டம் முழுவதும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என  அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்து அறிவித்து உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக வணிகர்கள், ஊழியர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.