வைரலாகும் ரீமா சென்னின் சமீபத்திய குடும்ப புகைப்படங்கள்….!

--

கிட்டதட்ட பத்து வருடங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார் ரீமா சென்.

தமிழில் மின்னலே படத்தின் மூலமாக அறிமுகமானார். சமீபத்தில் மின்னலே இரண்டே பாகம் எடுத்தால் சிறப்பு என மாதவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் .

அதை தொடர்ந்து அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருந்தது,

2012இல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அவர் தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ருத்ர வீர சிங் என அவர் தனது மகனுக்கு பெயரிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது ரீமா சென் குடும்ப புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.