வாஷிங்டன்:
ந்திய சுதந்திர தினத்திற்கு கமலா ஹாரிஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுகிறார் கமலா ஹாரிஸ். ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கலிபோர்னியாவின் செனட்டரான கமலா ஹரிஷ் துணை அதிபர் பதவிக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டதாக  அறிவித்திருந்தார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
இந்திய சுதந்திர தினத்தையொட்டி தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கமலா ஹாரிஸ்:  இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், கடந்த 74 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் கவனத்திற்குரியது என்றும், இன்று நடைபெற உள்ள கொண்டாட்டத்தில் நீங்கள் அனைவரும் என்னுடன் கலந்து கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன் நாம் அனைவரும் சேர்ந்து ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உறுதி கொள்வோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் துணை அதிபர்  வேட்பாளராக அவரைத் தேர்ந்தெடுத்த பின், அவர் தனது சென்னை பயணம் பற்றிய அனுபவங்களை பேசியுள்ளார்:  “என்னுடைய அம்மா சியாமளா தனது 19 வயதில் கலிபோர்னியா வந்தார், அவரிடம் உடைமைகள் எதுவும் இல்லை என்றாலும் தனது பெற்றோரிடம் இருந்து நிறைய பாடங்களை மட்டுமே அவர் எடுத்து வந்தார். அவர் எங்கிருந்து வந்தார் என்பதை மக்கள்களாகிய நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக எங்களை இந்தியாவிற்கு அழைத்துச் செல்வார். அவரது வம்சாவழி பற்றி நாங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பார் அவர்.
என்னுடைய தாய் இட்லி எங்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார், மேலும் என் தாத்தாவுடன் அன்றைய மெட்ராஸில் நீண்ட தூரம் நடைபயணம் மேற்கொள்வேன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மிகப்பெரிய கதாநாயகர்களை பற்றி அவர் என்னிடம் கூறுவார், அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து மீண்டும் தொடக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு என்று அவர் கூறுவார். நான் இந்த இடத்தில் தற்போது நிற்பதற்கு அதுபோன்ற பாடங்கள் தான் காரணம் என்று நான் நினைக்கின்றேன் என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.