இந்தியாவுக்குள் வரும் தமிழக அகதிகள்….உளறி கொட்டிய மத்திய அமைச்சர்

டில்லி:

லோக்சபாவில் அகதிகள் தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்து பேசுகையில்,‘‘வங்கதேசம், மியான்மர், தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அகதிகள் வருகின்றனர்’’என்றார்.

‘‘தமிழகம் இந்தியாவில் இருக்கிறது, தமிழகத்தில் இருந்து அகதிகள் இந்தியாவுக்குள் எப்படி நுழைய முடியும்’’என்று அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

‘‘நான் இலங்கையில் இருந்து வரும் அகதிகள் என்று கூறுவதற்கு பதிலாக தமிழ்நாடு என்று வாய்தவறி கூறிவிட்டேன்’’ என்று ரிஜிஜு கூறினார். எனினும் அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டனர்.
சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலையிட்டு உறுப்பினர்களை அமைதிப்படுத்தினார்.