ஓபிஎஸ்-ஐ சந்திக்க மறுத்தது நிர்மலா சீத்தாராமனின் நற்தன்மையற்ற செயல்: மா.பா காட்டம்

--

சென்னை:

ன்றி சொல்ல டில்லி வந்த தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க மறுத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் செயல், நற்தன்மையற்றது என்று தமிழக அமைச்சர் பா.பா.பாண்டியராஜன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழக துணைமுதல்வர் ஓ.பி.எஸ். டில்லி சென்றார். அவரது திடீர் டில்லி வருகை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், தனது தம்பி உடல்நிலை கருதி, ஏர் ஆம்புலன்ஸ் வசதி செய்துகொடுத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு நன்றி தெரிவிக்க வந்ததாக தெரிவித்தார்.

ஆனால், மத்திய அமைச்சர் நிர்மலாவின் அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ்ஐ சந்திக்க அமைச்சர் நிர்மலா மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாக ஏமாற்றத்துடன் ஒபிஎஸ் சென்னை திரும்பினார். இதுகுறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா சொல்லியிருக்கிறார் என்று மழுப்பலாக கூறினார்.

மத்திய அமைச்சரின் இந்த செயல் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த நிலையில், தமிழக அமைச்சர் பா.பா.பாண்டியராஜ்ன் நிர்மலா சீத்தாராமனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நன்றி சொல்ல வந்த ஓபிஎஸ்-ஐ நிர்மலா சீதாராமன் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது என்றும், நன்றி சொல்ல சென்றபோது அதை ஏற்காதது நிர்மலா சீதாராமனின் நற்தன்மையற்ற செயல் என்றும் காட்டமாக கூறி உள்ளார்.

மேலும், ஓ.பி.எஸ். சகோதரருக்கு மருத்துவ சேவை விவகாரத்தில் எதுவும் முறைகேடு நடக்க வில்லை  என்றும்  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறி உள்ளார்.