தமிழ்த் திரையுலகில் சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரித்து, அதில் வெற்றி கண்டவர் சி.வி.குமார்.

அந்த வரிசையில் இப்போது இணையத்தில் பிரபலமாகி வரும் ஓடிடி தளங்களைப் பின்பற்றி இப்போது சி.வி.குமாரும் புதிய திட்டம் ஒன்றை உருவாகியுள்ளார்.

‘தியேட்டர் டூ ஹோம்’ என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ‘ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில் வீட்டிலிருந்து நினைக்கும் படங்களை, நினைக்கும் நேரத்தில் பார்க்கலாம். படத்தை ஒரு முறை பார்க்க கட்டணம் என்ற விதிமுறைப்படி இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.