போதைப் பொருள் விவகாரம் : நான் நேர்மையான பெண் – காஜல் அகர்வால்

தராபாத்

போதைப் பொருள் விவகாரத்தில் சமீபத்தில் காஜல் அகர்வாலின் மேனேஜர் கைது செய்யப்பட்டதற்காக தான் நேர்மையான பெண் என்றும் எந்த சட்ட விரோததுக்கும் துணை போகமாட்டேன் என காஜல் அறிவித்துள்ளார்.

போதைப் பொருள் உபயோகிப்பு விவகாரத்தில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமா உலகின் பல பிரபலங்கள் சந்தேக வளையத்துக்குள் சிக்கியதும் தெரிந்ததே.  இதில் நடிகர்கள் ரவிதேஜா, தருண், சுப்பாராஜு, தனிஷ், நவ்தீப் ஆகியோரும் நடிகைகள் சார்மி, முமைத்கான் ஆகியோரும் ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே நாயுடு, மற்றும் நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜர் புட்கர் ரோஜன் ஜோசப்பும் அடங்குவார்கள்.

தற்போது காஜல் அகர்வாலின் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றி காஜல், “நான் என் மேனேஜருக்கு இதில் சம்மந்தம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.  நான் நேர்மையான பெண்,  என் பெற்றோர்கள் நான் நடிப்பில் மட்டுமே என் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.  எந்த சட்ட விரோதமான செயலிலோ, சமுதாய சீர்கேட்டுக்கு துணை போகும் செயலிலோ, இந்த காஜல் ஈடுபட மாட்டாள்” எனக் கூறியுள்ளார்.