சென்னை:

ட்சியை கவிழ்க்க தயங்க மாட்டோம் என்று டிடிவி அணி எம்எல்ஏக்கள் கூறியுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் தனது அமைச்சரவை சகாக்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ள நிலையில், மேலும் எம்எல்ஏக்களுக்கு பண ஆசை காட்டி தனது அணிக்கு இழுக்க முயற்சித்து வருவதாக கூறப்படும் பரபரப்பான சூழ்நிலையில்,  ‘ஆட்சியை கவிழ்க்கவும் தயங்கமாட்டோம்’ என்று டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூறியுள்ளனர்.

திமுகவும் தன் பங்குக்கு, தமிழகத்தில் ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ நடத்த உத்தரவிட வேண்டும் என்று கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ள நிலையில், தமிழக முதல்வர், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தனது அமைச்சரவை சகாக்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

என்னும் வார்த்தை மீண்டும் மேலோங்கியுள்ள இந்த பரபரப்பான சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனையில்,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்பட முக்கிய அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.