சாய் தரம் தேஜா வை காதலிப்பதாக வரும் செய்தி வதந்தி மட்டுமே : ரெஜினா

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரெஜினா தற்போது பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

பிரபல நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் சாய் தரம் தேஜா நாயகனாக அறிமுகமான பிள்ளா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் ரெஜினா. அதில் இருந்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக பேசப்படுகிறது.

இதுகுறித்து நடிகை ரெஜினா விளக்கமளித்துள்ளார். கடந்த சில தினங்களாக எனக்கும்சாய் தரம் தேஜாவிற்கும் காதல் என்று செய்திகள் வந்துள்ளன. அதில் உண்மையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தகவல் ஒரு ஆதாரமற்ற வதந்தி. எனது ஒரே காதல் நடிப்பு தான். அதில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.