புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’.
இந்தக் கொரோனா ஊரடங்கில் அனைவருமே படம் குறித்த தகவல்கள், டீஸர், ட்ரெய்லர் என வெளியிடத் தயங்கிய நேரத்தில், விஷால் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லரை 4 மொழிகளில் வெளியிட்டார்.
இதனிடையே, இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறது என்று செய்திகளைப் பரப்பினார்கள். இது தொடர்பாக விசாரித்தபோது, “‘சக்ரா’ படம் திரையரங்கில்தான் வெளியாகும். இயக்குநரே இன்னும் ஒரு வார படப்பிடிப்பு இருப்பதாக பேட்டியளித்துள்ளார். ஆகையால் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பில்லை.என்று தெரிவித்தார்கள். இதன் மூலம் திரையரங்கில் ‘சக்ரா’ வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் சக்ரா படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்துள்ளார் ரெஜினா. மேலும் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அவருக்கும் விஷாகுக்கும் இடையே ஒரு பிரமிக்க வைக்கும் ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்ற தகவல் லீக் ஆகியுள்ளது.