நாட்டில் மாநிலங்களுக்கு இடையிலான பாரபட்சம் அதிகரிப்பு…பீகார் துணை முதல்வர்

பாட்னா:

மாநிலங்களுக்கு இடையிலான வரி வருவாய் பங்கீட்டில் பாரபட்சம் அதிகரித்துள்ளது. பீகாருக்கான ஒதுக்கீடு அளவு குறைந்துள்ளது என்று அம்மாநில துணை முதல்வர் சுஷில்குமார் மோடி கூறியுள்ளார்.

பாட்னாவில் நடந்த ஒரு கருத்தரங்க நிகழ்ச்சியில் பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மக்கள் தொகை பெருக்கத்தால் மாநிலத்துக்கு பெரும் சுமை ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக சிறப்பான செயல்பாடு காரணமாக குறிப்பிட்ட அளவு வளர்ச்சியை பீகார் அடைந்துள்ளது.

பணக்கார மாநிலங்கள் மற்றும் ஏழை மாநிலங்களுக்கு இடையிலான பாரபட்சம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வரி வருவாயின் பங்களிப்பு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. 11வது நிதி ஆணையத்தில் 28.5 சதவீதமாக இருந்த பங்கு அளவீடு 42 சதவீதமாக 14வது நிதி ஆணையத்தில் உயர்த்தப்பட்டுள்ளளது. இந்த விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் பீகாருக்கு தற்போது 14.6 சதவீதத்தில் இருந்து 9.55 சதவீதமாக குறைந்துள்ளது.

ஜிஎஸ்டி வரி வசூலில் மத்திய மாநில அரசுகள் தங்களது இறையான்மைய சரணடைய செய்துள்ளன. அதனால் சிறந்த முன்னுதாரணமான கூட்டாட்சி தத்துவத்தை 15வது நிதி ஆணையத்தில் அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Regional disparity is growing in the country says bihar deputy cm Sushil Modi, நாட்டில் மாநிலங்களுக்கு இடையிலான பாரபட்சம் அதிகரிப்பு...பீகார் துணை முதல்வர்
-=-