20-ம் தேதி முதல் தமிழகத்தில் பத்திர பதிவு அலுவலகங்கள் இயங்கும்…

சென்னை:

மிழகத்தில் வரும் 20-ம் தேதி முதல்  பத்திர பதிவு அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

கொரோனா பரவல் நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால், அத்தியாவசிய தேவைகளுக்கான அரசுத்துறைகள் உள்பட பெரும்பாலான துறைகள் மூடப்பட்டன.

மக்கள் அதிகம் கூடும் துறைகளான பத்திரப்பதிவுத் துறை, நீதிமன்றம் போன்றவைகளில் பணிகள் முடங்கின. தற்போது ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் 20ந்தேதி முதல் ஊரடங்கில் சில  தளர்வுகள் அளிக்கலாம் என மத்தியஅரசு அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் பத்திரப்பதிவு துறை வரும் 20ம் தேதி முதல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உளளது. குறிப்பிட்ட பணியாளர்களுடன், சமூக விலகல் கடைபிடித்து பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டு உளளது.