மும்பை: இந்திய கிரிக்கெட் அணியினருக்கு ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறையும், கண் பரிசோதனை நடைபெறும் விஷயம், பிசிசிஐ அதிகாரி ஒருவரின் சொற்களின் மூலம் தெரியவந்துள்ளது.

கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் துவங்கவுள்ள கிரிக்கெட் போட்டிகளையொட்டி, தனது கட்டுப்பாட்டிலுள்ள வீரர்கள் அனைவருக்கும் கட்டாயக் கண் பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவித்தது பெங்கால் கிரிக்கெட் சங்கம்.

இந்த அறிவிப்பையடுத்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “கிரிக்கெட் என்பது கண் & கைகளை ஒருங்கிணைத்து விளையாடுவதாகும். எனவே, கண்ணில் ஏதேனும் பிரச்சினை என்றால் சிக்கல்தான்.

சுமார் 140 கி.மீ. வேகத்தில் வரும் பந்தை, ஒரு வினாடி தவறாக கணித்தாலும், நாம்தான் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும். எனவே, இந்திய அணியின் வீரர்கள் அனைவருக்கும், காலாண்டுக்கு ஒருமுறை என, கடந்த 3 ஆண்டுகளாகப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது” என்றார்.