அத்வைத வேதம் படித்தவர்.. விஎச்பியின் சூர்யா காயத்திரியின் உறுப்பினர் ரெஹானா பாத்திமா.. பரபரப்பு தகவல்கள்

கொச்சி:

பரிமலை அய்யப்பன் கோவிலுக்குள்  நுழைய முயன்ற ரெஹானா பாத்திமா என்ற இஸ்லாமிய மாடல், விஎச்பி யின் துணை அமைப்பான சூர்யா காயத்திரியில் சேர்ந்து அத்வைதா வேதம்  கற்றவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பிரபலமான அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியதை தொடர்ந்து, கோவிலுக்குள் செல்ல சில பெண்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இது அய்யப்ப பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், நேற்று சபரிமலை சன்னிதானத்திற்குள் நுழைய முயன்ற கவிதா என்ற பெண் செய்தியாளர் மற்றும் மாடலிங் துறையை சேர்ந்த கவர்சசி பெண்மணி ரெஹானா பாத்திமா ஆகியோர் பக்தர்கள் கடும் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையில் இஸ்லாமியரான  ரெஹானா பாத்திமாவின் அய்யப்பன் வேடத்திலான கவர்ச்சி படம் மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. இந்த படம் மற்றும் ரெஹானாவின்  செயல்கள் பந்தள அரச குடும்பத்தை சேர்ந்தவர்களிடையேயும், தந்திரிகள் மத்தியிலும்  எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், ரெஹானா சபரிமலை செல்ல பாரதியஜனதா உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ரெஹானா  பலமுறை கேரள பாஜக பிரமுகர் சுரேந்திரன் என்பவரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரெஹைனா விவகாரத்தில் பாரதியஜனதா பின்புலம் இருப்பதாக குற்றம் சாட்டுப்பட்டு உள்ளது. இதை  ரெஹைனா பாத்திமாக உறுப்பினராக உள்ள  கிஸ் ஆஃப் லவ் அமைப்பு உறுதிபடுத்தி உள்ளது.

இதற்கிடையில் ரெஹைனா விசுவஇந்த பரிஷத்தின் துணை அமைப்பான சூர்ய காயத்திரி என்ற அமைப்பின் உறுப்பினர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த அமைப்பில் சேர்ந்து ரெஹைனா  அத்வைதம் குறித்து படித்து வந்தாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு  ரெஹானா இஸ்லாமிய மதத்தில் இருந்து விலகி இந்து மதத்திற்கு மாறியதாகவும், ஆனால் அவர் தனது பெயரை மாற்றவில்லை.. ஆனால் பல ஆண்டுகள் அவர்  வேதபாடம் படித்து வந்ததாகவும் அவரது கணவர்  மனோஜ் கூறி உள்ளார்.

இந்த சம்பவங்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.