சென்னை:

தமிழகத்தில் 12915 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின்  தபால் வாக்குகள் சரியான முறை யில் நிரப்பப்படாததால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார். இது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறமையின்மையை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

மிழகத்தில் கடந்த மாதம் 18ந்தேதி மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு போதுமான அளவு தபால் வாக்குகள் வழங்கப்பட வில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கை விசாரித்த நீதிமன்றம்  மக்களவை தேர்தலில் எத்தனை பேர் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்? அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை?  என்ற விவரங்களை வரும் 17ம் தேதி விவரங்களை தாக்கல் செய்ய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினருக்கு 4,35,003 பேருக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன என்று கூறி உள்ளது.

இதில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது தபால் வாக்குக்கான  வாக்கு விண்ணப்ப படிவங்களை சரியான முறையில் நிரப்பாததால், அவர்களின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்து உள்ளது. இதுபோன்ற காரணங்களால்  12915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன என்றும் தெரிவித்து உள்ளது.

இதையடுத்து நீதிபதிகள்,  தமிழகத்தில் தபால் ஓட்டுக்கள் தொடர்பான அனைத்து விவரங்களை யும் 2 நாட்களில் இணையதளங்களில் பதிவேற்ற வேண்டும்  என்றும்,  தபால் வாக்குகள் தொடர்பாக குழப்பம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  ஒவ்வொருவரும் குறைந்தது 30ஆயிரம் முதல் லட்சக் கணக்கில் ஊதியம் பெறும் நிலையில், தபால் வாக்குகளை கூட சரியான முறையில் நிரப்பத் தெரியாமல் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சுமார்  12915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் தவறுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டி ருப்பதாக தமிழக அரசு ஊழியர்களின் அறிவுத்திறமையை  தேர்தல் ஆணையம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது .

ஒரு வாக்குப்பதிவு படிவத்தைகூட  சரியாக  நிரப்பத்தெரியாத இவர்களின் கைகளில் எதிர்கால சமுதாயம் சிக்குண்டுள்ளது தமிழகத்தின் அவலநிலை. தமிழக அரசுபள்ளி ஆசிரியர்களின் அறிவுத்திறமைக்கு இதைவிட வேறு சாட்சி தேவையில்லை.

எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களால் தமிழக மக்களுக்கு என்ன பயன்? என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.