வேட்புமனு நிராகரிப்பு: பிரதமருக்கு விஷால் டுவிட்
சென்னை,
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
முதலில் மனு நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் விஷாலின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பரிசீலிப்பதாக அறிவித்த தேர்தல் ஆணையர், பின்னர் நள்ளிரவு அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து, தமிழக தேர்தல் ஆணையாளரிடம் புகார் செய்யப்போவதாகவும், வழக்கு தொடர இருப்பதாகவும் நடிகர் விஷால் கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து, பிரதமர் மோடிக்கும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கும் டுவிட்டரில் விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.
அதில்,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் என்ன நடக்கிறது என்று தங்களுக்கு தெரியும் என நம்புகிறேன், எனது வேட்பு மனு முன்பு ஏற்கப்பட்டு பின்பு நிராகரிக்கப்பட்டது முறையானது அல்ல, இது முற்றிலும் தவறானது, நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு விஷால் கூறி உள்ளார்.