றெக்க திரைப்படத்துக்கு கிடைத்தது “யூ” சான்றிதழ்..!

Rekka poster

றெக்க ரத்தினசிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் வரும் 7ஆம் தேதி திரைக்குவரவுள்ளது. இத்திரைப்படத்தை விஜய்சேதுபதியின் நெருக்கமான ஆரஞ்சி மிட்டாய் திரைப்படத்தை தயாரித்த காமென் மேன் புரொடக்ஷ்ன் நிருவனம் தான் இந்த திரைப்படத்தையும் தயாரிக்கின்றது.

இப்படத்தின் தணிக்கை குழுவுக்கான காட்சி இன்று சென்னையில் திரையிடப்பட்டது, இத்திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு சில காட்சிகளை மட்டும் நீக்க சொல்லிவிட்டு படத்துக்கு யூ சான்றிதழ் வழங்கியுள்ளது, அது மட்டும் அல்ல படத்தை பார்த்துவிட்டு படம் சூப்பரா இருக்கு நல்ல படியா வேலைய பாருங்க அப்படின்னு சொல்லியுள்ளனர்.

எனவே இதற்கு முன்பு குறிப்பிட்ட படி சரியாக வரும் 7ஆம் தேதி இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.