டெல்லி:
கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், புலம்பெயர்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரத்னதீப் எச்சரித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அரசு பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கள் நிபந்தனைகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில் இந்தியாவில் தற்போதுதான் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட  உலக நாடுகளில் இந்தியா 10வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தளர்வுகள் காரணமாக  வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். குறிப்பாக லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களும் மாநிலம் விட்டு மாநிலம் சென்றுகொண்டிருக்கிறனர்.
இவர்கள்  பயணத்தால் வரும் நாட்களில் கொ ரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்
“தற்போது நாட்டில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதெல்லாம் ஹாட்ஸ்பாட் பகுதியிலிருந்துதான் வருகிறது. மத்திய அரசு கட்டுப்பாடுளை தளர்த்தியிருப்பதாலும், ரயில், விமானப் போக்குவரத்து அதிகரிப்பாலும், புலம்பெயர்வர்கள் இனிவரும் நாட்களில் மேலும் அதிகமானோர் பயணிப்பார்கள். இதனால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, புலம்பெயர்கள் வரும் பகுதிகளில் மத்திய மாநில அரசுகள் கண்காணி்ப்பை அதிகப்படுத்தி நோய்தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த  ஆசிய மருத்துவக் கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் கே.கே. அகர்வால், சமூக விலகலைக் கடைபிடிக்காமல் புலம்பெயர்வர்கள் பயணித்தால், வரும் நாட்களில் கொரோனா பரவும் வேகம் அதிகரிக்கும். அடுத்த 10 நாட்களில் 2 லட்சத்தை இந்தியா கடந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.