ராட்சசி படத்தினை தொடர்ந்து ஜோதிகா ஜாக்பாட் படத்தில் நடித்து வருகிறார். ராட்சசி படம் நாளை ஜூலை 5 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.

அதேபோல் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் ஜாக்பாட் படத்திற்கு தணிக்கை குழுவானது யு சான்றிதழ் கொடுத்துள்ளது.

குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் தான் ஜாக்பாட் படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரேவதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக உருவாகி வருகிறது . சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.