தேர்தலை நினைத்தாவது நிதி உதவி அளியுங்கள் : தமிழக அமைச்சர் கடிதம்

 

சென்னை

ள்ளாட்சிகளுக்கு போதுமான நிதி உதவி அளிக்கவில்லை எனில் மாநில மத்திய அரசுகளுக்கு வரும் 2019 தேர்தலில் பாதிப்பு உண்டாகும் என தமிழக அமைச்சர் வேலுமணி கடிதம் எழுதி உள்ளார்.

தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல் உள்ளதால் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  உள்ளாட்சி அமைப்புகளின் செலவில் 50% நிதியை மத்திய அரசு அளித்து வருகிறது.   அதை ஒட்டி   தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடம் இருந்து 2017-18 ஆம் ஆண்டுக்கான தொகை ரூ.952.84 கோடி வர வேண்டி உள்ளது.   அது தவிர நடப்பாண்டுக்கு வர வேண்டிய தொகை ரூ.987.54 கோடி வர வேண்டி உள்ளது.

இந்த மாதம் 7 ஆம் தேதி மத்திய அரசு உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தினால் மட்டுமே இந்த நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தது.   இந்த மாதம் 16 ஆம் தேதி நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த நிதியை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.  அதற்கு ஆவன செய்வதாக பிரதமர் மோடி ஒப்புக் கொண்டுள்ளார்.

இதை ஒட்டி தமிழக உள்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.  அதில், “நிதிப் பற்றாக்குறையால் உள்ளாட்சி அமைப்புகள் பல முன்னேற்ற திட்டத்துக்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் உள்ளன.  இதனால் மக்கள் கடும் துயருறுகின்றனர்.

இதை ஒட்டி எதிரக்கட்சிகள் ஆளும் கட்சியின் மீது கடுமையாக குறை கூறி வருகின்றனர்.   முக்கியமாக திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே அதிமுக அரசைப் பற்றி மக்களிடம் கடுமையான விமர்சனத்தை முன் வைக்கின்றனர்.

இதனால் மாநில அரசு மட்டும் இன்றி மத்திய அரசுக்கும் பழி உண்டாகிறது.  இவை நிச்சயம் வரும் 2019 பொதுத் தேர்தலில் எதிரொலிக்கும்.   ஆகவே வரப்போகும் தேர்தலை நினைத்தாவது உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்க வேண்டிய நிதியை விரைவில் அளிக்க வேண்டும்” என கூறி உள்ளார்

 

You may have missed