கட்சிகளுக்கான நன்கொடை பத்திரம் வெளியிடும் பணி மும்முரம்

டில்லி:

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான, தேர்தல் பத்திரங்களை விரைவில் அறிமுகம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் ‘‘தேர்தல் பாண்டு அறிமுகம் செய்யப்படும்’’ என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார். தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் வகையில் தேர்தல் பாண்டு கொண்டு வரப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் பாண்டு அறிமுகம் செய்வதற்கான பணியில் மத்திய நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியும், ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் மட்டுமே இந்த பத்திரங்களை செலுத்த முடியும். இந்த பத்திரங்கள் ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.