மும்பை

ந்திய நிறுவனங்களில் முதல் முறையாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து தற்போது மொத்த மதிப்பு ரூ.9 லட்சம் கோடியை அடைந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் உலக அளவில் மிகவும் அதிக அளவில் வர்த்தகம் செய்து வருகிறது.   இந்த நிறுவனம் தொலைத் தொடர்பு, மளிகை, பெட்ரோலியப் பொருட்கள் எனப் பல வர்த்தகங்கள் நிகழ்த்தி வருகிறது.   இந்தியாவில் அதிக அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது.

இன்று ரிலையன்ஸ் பங்குகள் விலை 2% விலை ஏறி ரூ.1423 ஐ அடைந்துள்ளது.   இதனால் இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.9 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது.   இந்நிறுவனப் பங்குகள் கடந்த ஜனவரியில் இருந்து விலை உயர்ந்து வருகின்றன.   தற்போது 26% விலை அதிகரித்துள்ளது.

இந்திய நிறுவனங்களில் ரூ.9 லட்சம் கோடி மதிப்பைத் தாண்டிய முதல் நிறுவனம் என்னும் பெருமையை ரிலையன்ஸ் அடைந்துள்ளது.  இந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்து வருவதால்  இந்த பங்குகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகப் பங்குச் சந்தை ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.