வியாழக்கிழமையன்று, 
மே 2016 ல் இருந்து சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களை 4G LTE க்கு மேம்படுத்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தயாராக உள்ளதென  அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளது.
Reliance-Jio-Infocomm-Ltd-4G
தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஜியோ பகிர்வு ஒப்பந்தத்தின் கீழ், 800 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் பயன்படுத்தி, LTE க்கு மேம்படுத்தப் போவதாக அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாக, ஒரு அதிகாரி  ஐஏஎன்எஸ்-க்கு தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம், இரு அம்பானி சகோதரர்களுடைய தொடர்பு சேவை நிறுவனங்கள் அரிதான வளியலைகளை வர்த்தகத்திற்கு பயன்படுத்தவும் பகிரவும் , அல்லது நாடு முழுவதும் உள்ளடக்கிய 800 MHz பேண்டில் ரேடியோ அதிர்வெண் ஸ்பெக்ட்ரம் ஒப்பந்தங்களை அறிவித்தது.
Reliance-Jio-Logo
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 800-850 மெகா ஹெர்ட்ஸ் பேண்டிற்காக 16 வட்டாரங்களில் ஸ்பெக்ட்ரத்தை பகிரவும் வணிகம் செய்யவும்  ரூபாய்.5,383.84 கோடியை அரசாங்கத்திற்கு கட்டணமாக வழங்கியிருந்தது.
அரிய ஆதாரத்திற்காக சந்தையில் தீர்மானிக்கப்பட்ட விலைக்கு ஒத்துக்கொண்டு, தொலைதொடர்பு ஸ்பெக்ட்ரம் அல்லது வளியலைகள் ஏலத்திற்குப் பதிலாக நிர்வாகத்தினாலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அரசாங்கம் கொள்கையில் மாற்றங்களை அங்கீகரித்தப் பின்னர் நிறுவனங்களுக்கு இக்கட்டாக இருந்தது.
“ஜியோ மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், சந்தைகள் முழுவதிலும் ஸ்பெக்ட்ரம் பகிர்வதிலும் வணிகம் செய்வதிலும் ஒரு உடன்பாட்டிற்குள் நுழைந்துள்ளனர் , இதற்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஸ்பெக்ட்ரத்தை பகிர்வதற்கு முன்பே அதை  தாராளமயமாக்குதல் என்பது மிக அவசியம். எனினும், ஏலம் சார்ந்த விலை இல்லாத நான்கு சந்தைகள் இருந்தன அதனால் கொள்கை முடிவு தேவைப்பட்டது,” என உலக வங்கி மற்றும் நிதி சேவைகள் நிறுவனம், டியுஷ் பேங்க் பங்கு ஆராய்ச்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டு நிறுவனங்கள் ஏற்கனவே 17 வட்டங்களில் ஸ்பெக்ட்ரம் பகிர்ந்து கொண்டிருக்கிறது. நான்கு வட்டாரங்களில் மட்டுமே மீதமுள்ளன – ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு.
reliance jio 2
“ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸிற்காக தாராளமயமாக்கும் செலவை ரூபாய்.55 பில்லியனாக மதிப்பீடு செய்துள்ளோம். ஆபரேட்டர்கள் ஒப்புதலுக்காக கோரிக்கை வைத்த பிறகு ஸ்பெக்ட்ரம் பகிர்வுக்கு ஒப்புதல் தெரிவிக்க  தொலைத் தொடர்புத் துறைக்கு 45 நாள் கால அவகாசம் உள்ளது. ஜியோ மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உடனடியாக பகிர்தலுக்கு தாக்கல் செய்வதை நாங்கள் எதிர்பார்க்கிறோம், ” என்றும் கூறினர்.
தொடர்புடையப் பதிவுகள்:

  1. ₹ 200ல் 4G சேவை: ரிலையன்ஸ் துவக்கம் ?
  2. விரைவில் 4ஜி: ரிலையன்ஸ் துவக்கம் ?
  3. ரிலையன்ஸ் -ரியோ ஒப்பந்தம் தாமதம் ஏன் ?
  4. M.T.S-யை வாங்கியது ரிலையன்ஸ்