இந்திய ரஷ்ய ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் பங்குதராரா ? புதிய தகவல்

டில்லி

ந்திய ரஷ்ய எஸ் 400 ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனமும் பங்குதாரராக உள்ளதாக இந்தியா டுடே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய நாட்டிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகள் வாங்க இந்தியா கடந்த 2015ல் முடிவு செய்தது.  ஆயினும் அது குறித்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகாமல் இருந்தது.   இந்த எஸ் 400 ஏவுகணைகளை வாங்கினால் பொருளாதார தடை விதிக்கப்படும் என இந்தியாவை அமெரிக்கா மிரட்டி வந்தது.   அந்த மிரட்டலை மீறி இந்தியா கடந்த வெள்ளி அன்று ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய நில அமைப்பு இணை செயலாளரும் ரஷ்யாவின் ரோசோபொரோன் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் பொது மேலாளரும் கையெழுத்திட்டுள்ளனர்.   இந்த முடிவு தேசிய நலனுக்காக எடுக்கப்பட்டதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது    இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலை பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வரவில்லை.

இது குறித்து இந்தியா டுடே ஊடகம் கீழ்க்கண்ட ஒரு ஆய்வு செய்தியை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், “கடந்த 2015 ஆம் வருடம் மோடி ரஷ்யா சென்றபோது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் ரஷ்யாவின் ரோசோபொரோன் நிறுவனத்தின் துணைநிறுவனமான அல்மெஸ் அண்டியுடன் எஸ் 400 ஏவுகணை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது.  

இது குறித்து ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனமும் ரஷ்யாவின் எஸ் 400 தயாரிப்பு நிறுவனமான அல்மாஸ் அண்டியும் இணைந்து எஸ் 400 ஏவுகணைகளும் இந்திய பாதுகாப்புக்கு தேவைப்படும் ராடார்களும் தயாரிக்க உள்ளன” என அறிவித்துள்ளது.  மேலும் இது ரிலையன்ஸ் வரலாற்றில் ஒரு மைல் கல் என அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முக்கிய கொள்கைகளில் மேக் இன் இந்தியா என்னும் இந்திய தயாரிப்பு முக்கியமானதாகும்.   எனவே இந்த எஸ் 400 ஏவுகணைகள் தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவில் இந்த ஏவுகணைகளை தயாரிக்க வேண்டும் என்றால் அதன் ஒப்பந்த தாரர் ரிலையன்ஸ் டிபன்ஸ் மூலம் மட்டுமே தயாரிக்க வேண்டி இருக்கும்.   அதை ஒட்டி ரிலயன்ஸ் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பங்குதாரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.