கமதாபாத்

லகின் மிகப்பெரிய மிருகக் காட்சி சாலையைக் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது.

இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் மிக மிக வேமகாமவளர்ந்து வருகிறது. இந்நிறுவனம் காலடி வைக்காத துறைகளே இல்லை என்னும் அளவுக்குப் பல துறைகளிலும் உள்ளது. நாட்டின் முக்கியமான துறைகளான பெட்ரோலிய துறையில் இருந்து மொபைல், இணையச் சேவை உள்ளிட்ட பன்முகம் கொண்ட இந்த நிறுவனம் தற்போது மிருகங்கள் வளர்ப்புத் துறையில் இறங்கி உள்ளது.

நேற்று ரிலையன்ஸ் நிறுவன இயக்குநர் பரிமள் நத்வானி இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிவிப்பின்படி முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த் அம்பானி வெகு நாளாக உலகின் மிகப் பெரிய மிருகக் காட்சி ந்சால்;ஐ ஒன்றை அமைக்க விருப்பம் கொண்டிருந்தார்.  அதன் அடிப்படையில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அருகே சுமார் 280 ஏக்கரில் இந்த மிருகக் காட்சி சாலை அமைக்கப்பட உள்ளது.

மிருகக்காட்சி சாலை அமைப்பதற்குத் தேவையான ஒப்புதல் மற்றும் அனுமதி மத்திய மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.,  ஏற்கனவே ஜாம் நகரில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மிருகங்களுக்கு மீட்பு மையம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த மீட்பு மையத்தில் வனவிலங்குகள் அவை சந்திக்கும் சிக்கல்களில் இருந்து மீட்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறது.

இதற்கு சில சிறுத்தைகளைக் குஜராத் மாநில வனத்துறை அனுப்பியது. இங்கு வந்த போது கடுமையான காயங்களுடன் இருந்த அவற்றுக்கு  இப்பொழுது சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

இந்த  மையம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி திட்டத்தின் கீழ் துவக்கப்படுகிறது. இங்கு கொரோனா அச்சுறுத்தல் பொதுமக்கள் வனவிலங்குகளைக் காண அனுமதிக்கப்பட மாட்டார்கள்  அதன் பிறகு பொதுமக்கள் அனுமதி குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.