மும்பை

ன்றைய பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் பங்குகள் விலை உயர்ந்து அந்நிறுவனம் ரூ.10 லட்சம் கோடி மதிப்பை எட்டி உள்ளது.

பங்குச் சந்தையில் கடந்த சில நாட்களாகப் பல முக்கிய பங்குகளின் விலை ஏறுமுகமாக உள்ளன.  அவ்வகையில்  முகேஷ் அம்பானியின் தலைமையில் இயங்கி வரும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்நிறுவனப் பங்குகள் கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து வருகிறது.  இன்று காலை பங்குச் சந்தை தொடங்கிய உடனே இந்த பங்குகளின் விலை மீண்டும் உயர்ந்தன.

இன்று காலை 10.10 மணிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் லிமிடெட் பங்குகள் 0.61 % விலை  உயர்ந்து ரூ.1579 ஐ எட்டியது.  இதன் மூலம் அந்த நிறுவனத்தின் மதிப்பு பங்குகள் விற்பனை விலையின் அடிப்படையில் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது.  இவ்வாறு உச்சத்தைத் தொடும் முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரூ.9 லட்சம் கோடி மதிப்பை எட்டி இந்த நிறுவனம் முதல் இடத்தில் இருந்தது.  அதன் பிறகு சென்ற வாரம்  இதன் மதிப்பு ரூ.9.5 லட்சம் கோடியைப் பிடித்து மீண்டும் முதலிடத்தில் அடுத்த சாதனையை அடைந்தது.  இன்று இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது.