நாள் ஒன்றுக்கு 1லட்சம் மாஸ்க் தயாரிக்கப்படும்… ரிலையன்ஸ்

மும்பை:

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 1லட்சம் மாஸ்க் தயாரிக்கும் வகையில் திறன் மேம்படுத்தப்படும் என்று ரிலையன்ஸ் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலோர் மாஸ்க் (முகமூடி), சானிடைசர்களை வாங்கி வருகிறார்கள். இவை போதுமான அளவு இல்லாத நிலையில், பல இடங்களில், அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரபல நிறுவனமான ரிலையன்ஸ்,  ஒரு நாளைக்கு 100,000 முகமூடிகளை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தித் திறனை மேம்படுத்துகிறது என்று அறிவித்து உள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நாட்டின் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஏராளமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படுகிறது,  கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு அவர்களுக்கு தேவையான மாஸ்க் தயாரிக்கும் பணியை மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான பணியாளர்களை காண்டிராக்ட் முறையில்  பணியில் அமர்த்தப்படுவார்கள். அதன்மூலம்  நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் மாஸ்க் தயாரிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.