பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் தனக்கு எதிராக கூட்டுச்சதி செய்து வருவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

jio

கடந்த செப்டம்பரில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டபின் டெலகாம் துறையில் மோசமான குழாயடி சண்டைக்கு ஒப்பான விவகாரங்கள் நடந்து வருகின்றன. பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் தனக்கு எதிராக கூட்டுச்சதி செய்து வருவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காம்ப்படிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா (சிசிஐ) என்ற அமைப்பிடம் புகார் அளித்துள்ளது. இது தொழில் போட்டியினால் ஏற்படும் விவகாரங்களை விசாரிக்கும் அமைப்பு ஆகும்.
இதுபற்றி ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே கடந்த அக்டோபரில் ரிலையன்ஸ் ஜியோ அழைப்புகளுக்கு வேண்டுமென்றே இந்த மூன்று நிறுவனங்களும் இணைப்பு கொடுக்கவில்லை என்று ஜியோ ட்ராயிடம் புகார் தெரிவித்திருந்தது. அதை விசாரித்து அது உண்மையென கண்டறிந்த ட்ராய் ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.1050 கோடியும், ஐடியா நிறுவனத்துக்கு ரூ.950 கோடியும் அபராதம் விதிக்கப்பட வேண்டுமென்று சிபாரிசு செய்திருந்தது.