டில்லி:

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டில் அதிக அளவில் வாடிக்கையாளர்களை கொண்ட செல்போன் நிறுவனமாக திகழ்ந்துள்ளது.

இந்த நிறுவனம் கடந்த மே மாதத்தில் புதிதாக 4.8 மில்லியன் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. இதே மாதத்தில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையளர்களில் எண்ணிக்கையை விட இரு மடங்கு வாடிக்கையாளர்களை ஜியோ ஈர்த்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஜியோவுக்கு 0.4 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருந்தனர். மே மாதத்தில் பாரதி ஏர்டெல் 2.1 மில்லியன் வாடிக்கையாளர்கள், பிஎஸ்என்எல் 1.36 வாடிக்கையாளர்கள், வோடாபோன் 1.1 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டிருந்தது. இதர 3 நிறுவனங்களின் மொத்த வாடிக்கையாளர்களை விட ஜியோ அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இது செல்போன் சேவை மட்டுமின்றி ப்ராட் பேண்டு சேவையிலும் முன்னிலை பெற்றதை டிராய் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த மே மாதத்தில் செயல்பாட்டில் இருக்கும் வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 8.7 மில்லியனாக இருநதுள்ளது. இது ஏப்ரலில் 0.4 மில்லியனாக இருந்தது. அதிகளவில் ஐபிஎல் போட்டியில் விளம்பரம் காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த ஏப்ரல் இறுதியின் படி 113 மில்லியன் வாடிக்கையாளர்களில் 8.7 மில்லியன் பேர் ரீசார்ஜ் செய்துள்ளனர்’’ என்று பகுப்பாய்வாளர் எம்கே க்ளோபல் தெரிவித்துள்ளார்.