தமிழக தெருவோர சுமை சிறு வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்குங்கள்! தமிழகஅரசுக்கு இராம சுகந்தன் கோரிக்கை

சென்னை:

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக தெருவோர சுமை , சிறு வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, இந்திய தேசிய கிராம தொழிலாளர்கள் சம்மேளனம்  தேசிய பொதுச்செயலாளர் வாழப்பாடி இராம சுகந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் முதல்கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் தீவிரமானதைத் தொடர்ந்து, ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சிறுதொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர் களின் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஐஎன்ஆர்எல்ப் தேசிய பொதுச்செயலாளர் இராம சுகந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைப்பு சாரா தொழிலாளர்கள், ரேசன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே சென்று நிவாரணப் பொருட்கள் வழங்குக! வாழப்பாடி இராம சுகந்தன் வேண்டுகோள்

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக தெருவோர சுமை , சிறு வியாபாரிகள்  கடுமையாக பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.  தினசரி உணவுக்கே அல்லல்பட்டு வருகின்றனர். தினசரி கூலிகளான அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தமிழக அரசு உதவி புரிய வண்டும்.

தமிழக தெரு(ஓர) சுமை சிறுவியாபாரிகள் முன்னேற்றப் பேரவையின் கோரிக்கை  ஏற்று இந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு  தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.