கொரோனா நிவாரண நிதியாக திரைப்பட துறை நலவாரியத்தில் பதிவு பெற்ற சுமார் 7 ஆயிரத்து 489 உறுப்பினர்களுக்கு சுமார் 74 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திரைப்படத்துறையினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு கொரோனா நிவாரண நிதி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

39 சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளதகாவும், நிவாரண உதவி கிடைக்க பெறாதவர்கள் சங்கம் மூலமாகவோ அல்லது திரைப்படத்துறையினர் நலவாரியம் அலுவலகம் (கலைவாணர் அரங்க வளாகம்) சென்னை-600002 முகவரியை தொடர்பு கொண்டு மின் அஞ்சல் வாயிலாக cinewelfare@gmail.com திரைப்படத்துறையினர் நலவாரிய உறுப்பினர் பதிவு எண், வங்கிக் கணக்கு புத்தகத்தில் உள்ளவாறு வங்கியின் பெயர், கிளை, கணக்கு எண், ஐஎப்எஸ்சி மற்றும் எம்ஐசிஆர் குறியீடு எண் ஆகியவற்றை விரைவாக அனுப்பி கொரோனா நிவாரண நிதியை பெற்றுக்கொள்ளலாம். என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.