ஏடென்:

ஏமன் நாட்டில் 3 ஆண்டாக நடந்து வரும் உள்நாட்டுப் போரால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து குடிபெயர்ந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

உள்நாட்டு அகதிகள் முகாம்களில் லட்சக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, பால் பவுடர், உடைகள், மருந்துப் பொருட்களை வெளிநாடுகள், தொண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

செங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஹொடைடா துறைமுகத்துக்கு வந்துசேரும் இந்த நிவாரணப் பொருட்கள் இங்கிருந்து அகதிகள் முகாம்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறன. சுமார் 2.2 கோடி மக்கள் வாழும் இந்நாட்டில் நான்கில் மூன்று பேர் நிவாரணப் பொருட்களை நம்பி வாழ்ந்து வருவதாக ஐநா மதிப்பீடு செய்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை சுமார் 11 மணியளவில் ஹொடைடா துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் நிவாரணப் பொருட்கள் எரிந்து நாசமடைந்துள்ளது.