சென்னை மக்களின் தாகத்தை தணிக்க ஓடோடி வருகிறது கிருஷ்ணா நீர்!

சென்னை:

சென்னை மக்களின் தாகத்தை தீர்க்க ஆந்திர மாநிலத்தில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள கிருஷ்ண நீர், இன்னும் 4 அல்லது 5 நாளில் தமிழக எல்லையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்த மாதம் சென்னை உள்பட தமிழகத்தில் கடுமையான குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளும் தண்ணீர் இல்லாமல் தூய்ந்து போன நிலையில், தமிழக அமைச்சர்கள் ஆந்திரா சென்ற கிருஷ்ண நீர் திறந்துவிடக்கோரி மாநில முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டியை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் சென்னையின் நீர் தேவையை பூர்த்திசெய்யும் வகையில், கிருஷ்ணா நதி நீர் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து சென்னைக்கு இன்று காலை 10 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது. தற்போத வினாடிக்கு 500 கன அடி அளவில் நீர் வந்துகொண்டிருக்கிறது. இது இன்று மாலை 1500 கன அடி அளவாக அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த நீர் இன்னும் ஐந்து நாட்களில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதன்பின் பூண்டி நீர்தேக்கத்துக்கு நீர் சென்று அங்கிருந்து புழல் ஏரிக்கு நீர் வரும்.

இதன் காரணமாக சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி