டெல்லி: 18 மாநிலங்களில் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 முதல் 5000 வரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் ஆலோசனையின்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் தலா 1000 ரூபாய் முதல் 5000 வரை செலுத்தப்பட்டுள்ளது.

தரவுகளின்படி, 18 மாநிலங்கள் மொத்தம் ரூ.2,250 கோடியை ஒரு முறை ரொக்கப் பயனாக வழங்கியுள்ளன. சிரமத்தில் உள்ள 1.8 கோடி பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களின் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது.

பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு தலைநகர் டெல்லியில் தலா ரூ .5 ஆயிரமும், பஞ்சாப் மற்றும் கேரளா தலா ரூ.3,000ம்  மாற்றப்பட்டு உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்கள் தலா ரூ .2,000 வழங்கப்பட்டுள்ளன.

ஒடிசாவில் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ .1,500 வழங்கப்பட்டுள்ளது. தவிர, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் உட்பட பல மாநிலங்களும் ஒன்று முதல் மூன்று மாதங்களுக்கு இத்தகைய தொழிலாளர்களுக்கு பல்வேறு அளவுகளில் இலவச ரேஷனை வழங்கியுள்ளன.

அனைத்து மாநிலங்களிலும் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியங்கள் 31,000 கோடி ரூபாயை செலவிடவில்லை என்று தொழிலாளர் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. கோவிட் -19 பரவல் காரணமான, தற்போது 3.5 கோடி பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் கணக்குகளில் நேரடியாக பணத்தை செலுத்துமாறு மத்திய அரசு மார்ச் 24ல் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியது.

18 மாநிலங்களில் பெரும்பாலானவை ஒவ்வொரு கட்டுமானத் தொழிலாளருக்கும் ரூ .1,000 வழங்கியுள்ளன. கணிசமான கட்டுமானத் தொழிலாளர்களை கொண்ட மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்கள் உடனடியாக வழங்கவில்லை.

ஆனால் ஊரடங்கின் போது தெலுங்கானா மாநிலத்தில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கூட ரூ .500 மற்றும் 12 கிலோ அரிசியை வழங்கியுள்ளது.

செப்டம்பர் 30, 2018ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 3.2 கோடி பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் அதிகபட்சம் உத்தரப்பிரதேசத்தில் 42 லட்சம், மேற்கு வங்கத்தில் 31 லட்சம், மத்திய பிரதேசத்தில் 30 லட்சம், தமிழ்நாட்டில் 29 லட்சம் மற்றும் ஒடிசாவில் 22.5 லட்சம்  உள்ளனர்.

இது குறித்து, தெற்காசியா கட்டுமான ஒன்றிய பிரதிநிதி ராஜீவ் சர்மா கூறி இருப்பதாவது: தற்போதைய நெருக்கடி காலங்களில், முன்னெப்போதையும் விட தொழிலாளர்களுக்கு அதிக நிவாரணம் தேவை. எனவே, பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களையும் மற்ற கட்டுமானத் தொழிலாளர்களையும் அணுகி உதவுமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.