லைப் மொபைலின் அடுத்த வெர்சன் – ஒரு பார்வை

கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலையன்ஸ் நிறுவனம் Lyf விண்ட் 7 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அதன் விற்பனை சூடு பிடித்ததை அடுத்து, அதைவிட சிறப்பம்சம் கொண்ட Lyf விண்ட் 7i என்கிற ஸ்மார்ட்போனை தற்பொழுது சந்தைக்கு கொண்டுவந்துள்ளது. அதன் விலையானது ரூ.4,999 என நிர்ணயம் செய்துள்ளது.

lyf-wind-7i-launchedLyf விண்ட் 7i போனில் போன்று இரண்டு சிம் போடும் வசதி மற்றும் கூடுதலாக பல தொழில்நுட்பங்கள் உள்ளடக்கியதாக வடிவமைத்துள்ளனராம். Lyf விண்ட் 7i ஸ்மார்ட்போனில் 720×1280 பிக்சல்கள், 1ஜிபி ரேம், பின்புற கேமராவில் எல்இடி ஃபிளாஷ் உடன் 8 மெகாபிக்சல் கேமரா, முன்புற கேமரா 5 மெகாபிக்சல், 2250mAh பேட்டரி திறன், வை-பை 802.11 b/g/n தொழில்நுட்பம், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, USB OTG, 3.5மிமீ ஆடியோ ஜாக், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி 2.0 வசதிகளும் இடம்பெறுள்ளது. Lyf விண்ட் 7i-யின் எடையானது 156 கிராமும். கருப்பு, நீல நிறங்களில் பேனல் உருவாகப்பட்டுள்ளது.