கொழும்பு: இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பலி எண்ணிக்கை 310 என்பதாக அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டின் தேசிய தெளஹீத் ஜமாத் என்ற மதவாத அமைப்பின் மீது புலனாய்வு அமைப்புகளின் சந்தேகம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் சிங்களர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும் என்றும் கூறப்படுகிறது.

இலங்கை அரசு தரப்பில் கூறப்படுவதாவது; இவ்வளவு பெரிய தாக்குதலை அந்த சிறிய மதவாத அமைப்பால் தனித்து செய்திருக்க முடியாது என்றும், இதில் சில வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பிருக்கலாம் என்கிற கோணத்திலும் விசாரணை செல்கிறது.

மொத்தம் 8 குண்டுவெடிப்புகளில் 7 தாக்குதல்கள் தற்கொலைப்படை முறையில் நடத்தப்பட்டவை. இவர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். இவர்களில் ஒருவரைத் தவிர, பிறர் மீது எந்த வழக்குகளும் கிடையாது. அந்த ஒருவர்கூட, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவரே என்கின்றனர்.

ஆனால், இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

– மதுரை மாயாண்டி