மதநல்லிணக்கம்: கோட்டை தாண்டி வரக்கூடாது

” மத நல்லிணக்கம்” பற்றி     கே.எஸ். சுரேஷ்குமார் அவர்கள் எழுதியுள்ள முகநூல் பதிவு:

 

a

 ட்பு, பணம் கொடுக்கல்/வாங்கல், வீட்டிற்கு சாப்பிட அழைத்தல், நோம்புக்கஞ்சி பரிமாறல், ஒரு சிகரெட்டினை இரண்டுபேர் பங்குபோடுதல், சரக்கை ஒரு சிப் அடிக்கக்கொடுத்து பின் தான் அடித்தல், பேச்சிலர் அறையில் ஒரே ஜட்டியைக்கூட பங்குபோட்டுக் கொள்ளுதல், தீபாவளிக்கு கிருத்துவ நண்பனிடம் ஆசிவாங்கி, புனிதரமலானுக்கு நாமும் குல்லா போட்டு, ஊர்த்திருவிழாவிற்கு எந்த ஊர் நண்பனையும் வரவழைத்து உபசரிக்கவும் , அடிபட்டு படுத்திருக்கும் ஐயப்பனுக்கு அப்துல்லா ரத்தம் கொடுக்கவும், மாரியின் உடலுறுப்பை மேரிக்கும் பொறுத்தக்கூட முடிகிறது. இன்னமும் ஒரு படி மேலே போய் குடும்ப கஷ்டத்தை பரிமாறிக்கொள்ளுதல் என அத்தனை ஆதூரமாய் கலந்து உறவாட முடிகிறது. இன்னும் என்னென்னவோ முடிகிறது.

கலந்து ஒரு காதலோ, கல்யாணமோதான் செய்ய முடிவதில்லை!