நீல் ஆம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ 11 விண்கலம், ஏவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.

நீல் ஆம்ஸ்ட்ராங்கை பற்றி நாம் பலமுறை கேட்டிருப்போம். அப்படிப்பட்ட நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு செல்ல காரணமாக இருந்த விண்கலன் தான் அப்பல்லோ 11. இந்த விண்கலன் ஜூலை 16, 1969ம் ஆண்டு 39-A ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

இந்த விண்கலன் ஜூலை 20ம் தேதி சந்திரனுக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது, ஈகிள் எனப்படும் சந்திரக்கூறு கொலம்பியாவில் இருந்து பிரிந்தது. கொலின்ஸ் பிரிந்த கொலம்பியாவிலேயே இருக்க, நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவின் மேற்பரப்பை நோக்கி இறங்கினார். இந்த விண்கலத்தில் இருந்து இறங்கி, நிலவில் கால் வைத்த முதல் மனிதராகவும் நீல் ஆம்ஸ்ட்ராங் பார்க்கப்பட்டார். அவரை தொடர்ந்து, அல்ட்ரின் நிலவில் கால் வைத்த இரண்டாவது மனிதனாவார்.

சந்திர மேற்பரப்பு தொடர்பாக அதுவரை கிடைத்த கண்காணிப்பு புகைப்படங்களில் இருந்து, தான் இறங்கிய இடம் அதிக பாறைகள் கொண்டதாக இருந்ததாகவும், நீல் ஆம்ஸ்ட்ராங் பின்னர் இந்த பயணம் குறித்து விளக்கம் அளித்திருந்தார்.

இதன் பின்னர் சுமார் 21 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் கொலின்ஸ் பிரிந்த கொலம்பியாவுடன், ஈகிள் இயந்திரத்தை இணைக்க, ஜூலை 24ம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் கொலின்ஸ், எட்வின் ஆல்ட்ரின் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.