சேலம்:  சேலம் அரசு மருத்துவமனையில்இன்றுமுதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று கல்லூரியின் முதல்வர் அறிவித்து உள்ளார்.

கொரோனா நோயாளிகளின் உயிர்காக்க ரெம்டெசிவிர் மருந்து பயன் அளிப்பதாக நம்பப்படுகிறது. இதனால், அம்மருந்து கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கள்ளத்சசந்தையிலும் பல மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதை தடுக்க சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த மருந்தை வாங்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் சென்னைக்கு வந்து, 48 மணி நேரம் வரை காத்துக்கிடந்து  வாங்கிச்செல்கின்றனர்.

இந்த நிலையில்,  சேலம் அரசு மருத்துவமனையில் ரெம்டெஸிவீர் #Remdesivir மருந்து இன்றுமுதல்  கிடைக்கும் என்று மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கூறியுள்ளார். சேலம் பகுதி மக்கள் அரசு மருத்துவமனையில் குறைந்த விலையில் ரெம்டெசிவர் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அறிவித்து உள்ளார். மேலும்  மருந்து வாங்க  வரும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையின் உதவியையும் நாடியுள்ளார்.