இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் உட்பட பல ஆராய்ச்சியாளர்கள் எலி மாதிரிகள் வைத்து செய்த ஆராய்ச்சி பெரும் திறன் வாய்ந்ததாக அமைந்து, புரோஸ்டேட்(Prostrate) புற்றுநோய்க்கு ஒரு புதிய சிகிச்சையை உருவாக்கியுள்ளனர். புரோஸ்டேட் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியில் பங்கு வகிக்கும் பாக்-1 என்ற புரதத்தின்   செயல்பாட்டை தடுக்கும் விதத்தில் இந்த சிகிச்சை வடிவமைக்கப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

prostate cancer4
சோம்னாத் ஷெனாய் , இணைப்பேராசிரியர், ஜார்ஜியா ஃபார்மஸி கல்லூரி

அனைத்து இனங்களிலும் ஆண்களின் புற்றுநோய் இறப்புக்கு புரோஸ்டேட் புற்றுநோய்  முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. “பாக்-1 ஒரு வகையான ஆன்/ஆஃப் சுவிட்ச் போல் உள்ளது. அது இயக்கப்படும் போது, புற்றுநோய் செல்களை உடல் முழுவதும் பரவக்கூடிய மெடாஸ்டாடிக் செல்களாக மாற்றுகிறது” என்று அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் (UGA) சார்ந்த சோம்நாத் ஷெனாய் கூறினார்.
பாக்-1 புரதங்களின் நடவடிக்கை கட்டுப்படுத்த ஐபிஏ-3 என்ற சிறிய மூலக்கூறு ஒன்றை  தொகுத்து நிர்வகிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள்  ஜார்ஜியா பல்கலைக்கழகத்தை சார்ந்த பிரையன் கம்மிங்க்ஸின் உதவியுடன்  ஒரு வழியை உருவாக்கியுள்ளனர். ஐபிஏ-3 மூலக்கூறை லிபோசோம் என்ற ஒரு குமிழி போன்ற அமைப்பிற்குள் வைத்து நரம்பூக்குள் செலுத்தினார்கள்.
 
ஐபிஏ-3 மூலக்கூறை சுற்றியுள்ள லிபோசோம் ஷெல் உடலால்  விரைவில் வளர்ச்சிதை அடையாமலிருப்பதை உறுதி செய்து பாகி-1 புரதத்தைத் தகர்க்க வினைத்தடுப்பானுக்கு போதுமான நேரம் வழங்குகிறது.
 
ஆராய்ச்சியாளர்கள், இந்த மூலக்கூறு  எலிகளில் புற்றுநோய் முன்னேற்றத்தின் வேகத்தைக் கணிசமாக குறைத்தும் மேலும் அது புற்றுநோய் செல்களை அப்போப்டோசிஸ் என்ற திட்டமிடப்பட்ட ஒரு வகையான  செல் இறப்பை மேற்கொள்ள கட்டாயத்திற்கு ஆளாக்குவதையும் கண்டறிந்தனர்.
“இந்த சோதனைகளை நாங்கள் முதலில் தொடங்கிய போது, ஐபிஏ-3 யை நேரடியாக இரத்த ஓட்டத்தில் செலுத்தினோம், ஆனால் அது சீக்கிரம் உறிஞ்சப்பட்டதினால் நாங்கள் அது பயனுள்ளதாக இருக்க வாரத்தில் ஏழு நாட்களுக்கும் அந்த சிகிச்சையை நிர்வகிக்க வேண்டியிருந்தது ,” என்று ஷெனாய் கூறினார். “ஆனால் டாக்டர் கம்மிங்ஸ் உருவாக்கிய லிபோசோம், ஐபிஏ-3 யை மிகவும் நிலையாக வைத்து, சிகிச்சைத் திட்டத்தை வாரம் இரண்டு முறையாக குறைத்துள்ளது,” என்று அவர் கூறினார்.
மனிதர்களில் ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு ஐபிஏ-3  ஒரு சாத்தியமான சிகிச்சையாக இருக்கலாம் என்று முத்ற்கட்ட முடிவுகள் கூறுகின்றன, ஆனால் மனித மருத்துவ பரிசோதனைகள் தொடங்கும் முன் அதிக வேலைகள் செய்து முடிக்க வேண்டும் என்று ஷெனாய் எச்சரிக்கிறார். “எங்கள் சோதனைகளின் முடிவுகள் உறுதியானதாகவுள்ளது, விரைவில் மருத்துவ பரிசோதனைகள் ஆரம்பிக்க விரும்புகிறேன், ஆனால் மனிதர்களிடம் அதை பயன்படுத்து முன் என்ன பக்க விளைவுகள் இந்த சிகிச்சையினால் ஏற்படும் என்பது பற்றி கண்டுபிடிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வாளர்கள் ” ஐபிஏ-3 மூலக்கூறு” குறித்து   வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையை  ஆங்கிலத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்.