டில்லி

ன்னிய நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அதிகப் பணம் அனுப்பப்படுவதாக உலக வங்கியின் இந்தியக் கிளை அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணி புரிய செல்வோரும், தொழில் செய்வோரும் அதிகம் உள்ளனர்.   அவர்கள் தாங்கள் ஈட்டும் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.   ஆனால் இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்கள் பெருமளவில் அயல்நாடுகளில் வர்த்தகம் செய்வதன் மூலமே அதிகப் பணம் இந்தியாவுக்கு வருகின்றது.

தற்போது இந்தியாவுக்கு வெளிநாடு வாழ்வோர் அனுப்பி வைக்கும் தொகை குறித்து உலக வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.   அதில் சென்ற ஆண்டை விட இந்தியாவுக்கு அதிக பணம் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.   சென்ற 2016-17 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் இருந்து 6270 கோடி அமெரிக்க டாலர்கள் வந்தது.  ஆனால் தற்போது முடிவடைந்த 2017-18 ஆம் ஆண்டில் 6900 கோடி அமெரிக்க டாலர்கள் வந்துள்ளன.

இந்த வருடம் வெளிநாட்டில் இருந்து அதிகத் தொகை பெற்றுள்ள நாடுகளில் இந்தியா முதல் இடம் வகிக்கிறது.  பிலிப்பைன்ஸ் இரண்டாம் இடத்திலும் மெக்சிகோ மூன்றாம் இடத்திலும் உள்ளன.   நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் நைஜீரியாவும் எகிப்தும் உள்ளன.