Random image

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்: சென்னை கலெக்டருக்கு உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு

சென்னை:

சென்னையில் உள்ள  நீர்நிலைகளில் ஆக்கிரமிக்கப்பட்ட,  ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களுக்குள்  அகற்ற வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும்,  நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கூடாது என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது/

சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டுள்ளது. அங்கு குடியிருந்து வரும் பொதுமக்கள், தாங்க, நீண்ட காலமாக அந்த இடத்தில் குடியிருந்து வருவதால்,  தங்களுக்கு  பட்டா வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது கடும் குற்றம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களுக்கு பட்டா தர உத்தரவிட முடியாது, நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கூடாது என்றும்  தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், சென்னையில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள,  ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை  மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர்.