அரசு வாகனங்களில் முன்பக்கம் உள்ள பம்பர் உள்ளிட்ட உதிரி பாகங்களை நீக்கவேண்டும்: தலைமைச் செயலாளர் சண்முகம்

சென்னை: அரசு வாகனங்களில் முன்பக்கம் உள்ள பம்பர் உள்ளிட்ட உதிரி பாகங்களை நீக்க தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

4 சக்கர வாகனங்களில் விபத்துகளில் வாகன சேதங்களை தவிர்க்க முன் பகுதியில் பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.  தற்போது உயர் நீதிமன்றமும் தமிழகத்தில் வாகனங்களில் இதுபோன்று பம்பர் பொருத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரட்டுள்ளது.

அதன்படி மாநிலம் முழுவதும் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந் நிலையில் 4 சக்கர அரசு வாகனங்களில் முன்பக்கம் உள்ள பம்பர் உள்ளிட்ட உதிரி பாகங்களை நீக்க தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

முன்பக்க பம்பர் உள்ளிடறவற்றை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தலைமைச் செயலாளர் இந்த கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, கோவை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சாலையில் செல்லும் டாட்டா ஏசி ஆட்டோக்கள், கார்களில் பம்பரை கழற்றி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.