இந்திய வீரர்களின் உணவு பட்டியலில் மாட்டிறைச்சியை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு பிசிசிஐ கோரிக்கை

இந்திய வீரர்களின் உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சி நீக்க வேண்டும் என்று பிசிசிஐ ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்கள் மாட்டிறைச்சி எடுத்துக் கொள்வரை ரசிகர்கள் விரும்பவில்லை என பிசிசிஐ கருதுகிறது.

remove

கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி நவம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இம்மாதம் 21ம் தேதி ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 4டெஸ்ட், 3டி20, 3ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. பயணத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவில் மாட்டு இறைச்சியை நீக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த முறை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியுடன் சென்ற அதிகாரி ஒருவருக்கு அசைவ உணவுகளால் உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்திற்கு சென்ற இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியலை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டது.

menu

அந்த புகைப்படத்தில் மாட்டுக்கறி இடம்பெற்றத்தை கண்டு சமூக வலைதளங்களில் கண்டன பதிவுகளை நெட்டிசன்கள் எழுப்பினர். இதனை கருத்தில் கொண்டு பிசிசிஐ ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு இந்த வேண்டுகோளை விடுத்ததா? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எதுவாயினும் வீரர்களின் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பதில் கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது.