தனியார் வாகனங்களில் போலீஸ், உயர்நீதிமன்றம், பிரஸ், ராணுவம் போன்ற பெயர்கள் எழுத தடை

டேராடூன்:

சாலை விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அருண்குமார் என்பவர் உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ராஜீவ் சர்மா இன்று விசாரணை மேற்கொண்டார். அப்போது மாநில அரசின் போக்குவரத்து துறை செயலாளருடன் நீதிபதி ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவு விபரம்….

# அரசு/தனியார் வாகனங்களில் பதவி, அலுவலக பெயர், அங்கிகாரம் இல்லாத முத்திரை போன்றவை இடம்பெற தடை விதிக்கப்படுகிறது. அதேபோல் உயர்நீதிமன்றம், ராணுவம், போலீஸ், பிரஸ் போன்ற வாசகங்கள் தனியார் வாகனங்களில் இடம்பெற தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை 72 மணி நேரத்தில் அமல்படுத்த வேண்டும்.

# சாலை பாதுகாப்பு தணிக்கையை ஒரு மாதத்தில் மேற்கொள்ள வேண்டும்.

# மோட்டார் வாகன சட்ட அமலாக்க குழுவினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

# அனைத்து வாகனங்களிலும் வேக கட்டுப்பாட்டு கருவி.

# போதை வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த 100 சுவாச பகுப்பாய்வாளர்கள் நியமிக்க வேண்டும்.

# டிரைவர், கண்டக்டர்களுக்கு சீருடை கட்டாயம்.

# முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகைகள்.

# விதிமீறுவோர் மீது நடவடிக்கை.

# தனியார் வாகனங்களில் பிளாஷ் லைட், சைரன் இருக்க கூடாது.

# அனைத்து பொது வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி.

# பள்ளி பேருந்து, வேன்களின் அதிக பாரம் ஏற்றுதலை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்.

# ஐஎஸ்ஐ முத்திரையுள்ள ஹெல்மட் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

# பேருந்துகளை தினமும் கழுவ வேண்டும்.

# பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்த போக்குவரத்து விழிப்புணர்வு மையம் ஏற்படுத்த வேண்டும்.

இது போன்ற அதிரடி உத்தரவுகளை நீதிபதி பிறப்பித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Army Etc. From Private Vehicles Within 72 Hours Uttarakhand High Court ordered, High Court, journalist, Remove Designations Like Police, உயர்நீதிமன்றம், தனியார் வாகனங்களில் போலீஸ், பிரஸ், ராணுவம் போன்ற பெயர்கள் எழுத தடை
-=-