அனுமதி இன்றி வைக்கப்பட்ட ஜெயலலிதா சிலையை அகற்றுவேன்!: டிராபிக் ராமசாமி

ஞ்சையில் அனுமதி இன்றி இரவோடு இரவாக  வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலையை அகற்றுவேன் என்று டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

தஞ்சை ரயில் நிலைய பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை இருக்கிறது. எட்டடி பீடத்தில் எட்டடி உயரமுள்ள இந்த சிலையை தஞ்சையில் எட்டாவது உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

ரயில் நிலைய விரிவாக்கப்பணிக்காக சிலையை அகற்ற வேண்டும் என்று நீண்டகாலமாக ரயில்வே துறை தெரிவித்து வருகிறது. இதை எதிர்த்து பலமுறை உள்ளூர் அதிமுகவினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

இந்த நிலையில்  கடந்த 18ம் தேதி காலை, எம்.ஜி.ஆர் சிலை அருகே அதே போல எட்டடி பீடத்தில் எட்டடி உயர ஜெயலலிதா சிலை இரவோடு இரவாக நிறுவப்பட்டது. அதிகாலையில் அந்த வழியில் சென்ற மக்கள் புதிய சிலையைப் பார்த்து அதிர்ந்தனர்.

சிலையின் பீடத்தில் திறப்பாளர் பெயரோ, ஜெயலலிதாவின் பெயரோ கூட இல்லை.

இது குறித்து உள்ளூர் அ.தி.மு.க. பிரமுகர்களிடம் கேட்டபோது, தங்களுக்கு ஏதும் தகவல் தெரியாது என்றனர். காவல்துறை தரப்பில் விசாரித்தபோது அவர்களும் தங்களுக்கு ஏதும் தகவல் தெரியாது என்றனர்.

டிராபிக் ராமசாமி

சிலை அமைக்க வேண்டுமென்றால் உள்ளாட்சி அமைப்பிடம் முறைப்படி மனு செய்து அனுமதி பெற வேண்டும். ஆனால் எந்தவித அனுமதியும் இன்றி இந்த சிலை வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அ.தி.மு.க. பிரமுகர்களே, சிலை வைக்கப்பட்டது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று கூறிய நிலையில் கடந்த டிசம்பர் 25ம் தேதி எம்.ஜி.ஆர். நினைவு நாளில் அவரது சிலைக்கும் அருகே திடீரென நிறுவப்பட்ட ஜெயலலிதா சிலைக்கும் அ.தி.மு.க.கவினர் மாலை அணிவித்தனர்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, “எந்தவித அனுமதியும் இன்றி ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. யாராவது எனக்கு புகார் கடிதம் கொடுத்தால், அந்த சிலையை அகற்றுவேன்” என்று prtrikai.com  இதழிடம் தெரிவித்தார்.

 

 

கார்ட்டூன் கேலரி