Random image

அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

டில்லி:

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை, விஜய் மல்லையா சந்தித்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அருண்ஜெட்லி பதவி விலக வேண்டும என்றும்  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிக்கொண்டு அதை அடைக்காமல் லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வரும் விஜய் மல்லையா, தான் இந்தியாவை விட்டு வெளியேறும் முன் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்ததாக தெரிவித்தார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அருண்ஜெட்லி, தான் சந்திக்கவே இல்லை என்று அலறியடித்துக்கொண்டு பதில் தெரிவித்தார்.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விஜய்மல்லையா ஜெட்லி சந்திப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று டிவிட் செய்துள்ளார்.

அதில்,  ‘விஜய் மல்லையா – அருண்ஜெட்லி சந்திப்பு விவகாரம் குறித்து பிரதமர் மோடி, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அருண்ஜெட்லி நிதி அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.