கோயில் பிரசாதம் விஷமான கொடுமை: ஆறு பேர் பலி

ர்நாடக மாநிலம் மைசூரு அருகே கோவில் பிரசாதம் சாப்பிட்ட ஆறு பேர் பலியானார்கள். மேலும் சுமார் நூறு பேர்  ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே ஹானூர் தாலுகாவிலுள்ள சுல்வாடி கிச்சுகுட்டி மாரம்மா கோவில் மிகவும் பிரபலமானது. இங்கு இன்றும் வழக்கம் போல் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதை சாப்பிட்ட நூற்றுக்கணக்காவர்களுக்கு மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதையடு்த்து அவர்கள் கமகெரே, கொல்லீகல் மற்றும் மைசூருவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி  15 வயது சிறுமி உள்ளிட்ட 6 பேர்  மரணமடைந்தனர். மேலும் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட காகங்களும் பலியாகிவிட்டன.

இதையடுத்து பிரசாத மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள, ஹானூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.